நீங்கள் நேர்மையாக இருந்தால் கோபப்படுவதில் பயனில்லைஒருவேளை நீங்கள் தவறாக இருந்தால் கோபப்படுவதற்கு தகுதி இல்லை
Saturday, 1 April 2017
Sunday, 29 January 2017
தீயநட்பு வேண்டவே வேண்டாம்
அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.
அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும்,
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.
மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.
முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய்
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.
உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ,
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.
Friday, 11 November 2016
வெற்றியின் ரகசியம்
நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி .
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே ... உடலில் வலுவில்லையே...
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே ...
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே ... தயங்காதே...!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும் . பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
மனதிற்கு அடிமையாகும் மனிதன் மிருகமாகிறான் அதே மனம் மனிதனுக்கு அடிமையாகும் போது அவனே தெய்வமாகிறான்
மனமும் மனதின் என்ணுகளுமே எல்லா செயல்களுக்கும் காரணமாக அமைகின்றன
மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்
ஆதலால் உங்கள் மனமாகிய கோவிலில் எண்ணமாகிய கடவுளை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லவற்றையே சிந்தனை செய்யுங்கள்
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
திருவினை வென்று வாழ்!
நற்செயல்களை செய் அதற்கான பலனை எதிர்பார்க்காதே அதன் பலன் எந்த வழியிலும் உன்னை வந்து சேரும் என்றென்றும் உன் பெயரை நிலைத்து நிற்க செய்யும்
உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால் உங்கள் வாழ்வில் உங்களைப் போல சந்தோஷமான மனிதன் வேறு யாரும் கிடையாது
பொறாமை என்பது அடிமைகளின் சாபக்கேடு அதை எப்போதும் தவிர்த்திடுங்கள் எல்லா ஆசிகளும் வெற்றிகளும் உங்களை வந்தடையும்
நல்லது அல்லது கேட்டது என்று எதுவும் இல்லை நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது
நிச்சயம் நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்
Tuesday, 4 October 2016
Wednesday, 10 August 2016
வாழ்க்கை தத்துவம்
இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம். `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும். வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது. வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள். மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம். ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம். எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும். எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள். பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)