Wednesday, 13 July 2016

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

உங்கள் அனைவரின் எண்ணங்களையும் சிறிது அறிந்ததால் இதனை கூறுகின்றேன் இதில் ஏதேனும் தவறாக கூறி உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும் ஆனால் நான் சொல்வது என்னவென்று ஒரு நாள்உங்கள்அனைவருக்கும்  புரியும் ...

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

நாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான்!கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது 'நம்மை கட்டுப்படுத்தும்சுயஅவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்' என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.நமக்குப் பிடித்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோடும்போது இடையூறுகள் குறுக்கிடுவது உறுதி. அந்த குறுக்கீடுநம்மிடம் இருந்தேவரலாமா?அதுநியாயமா?ஏற்கனவே 'முடியாது' என்று முடிவு செய்துவிட்டால் நமது எண்ணம் 'முடியும்' நோக்கத்தில் நம்மைச்செயல்பட அனுமதிக்காது. 

அதுபெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. அடைத்து வைத்த அறையில் காற்று புகுமா?திறந்த அறைக்குள்தான் காற்று வரும். ஒட்டடைதூசிஉள்ள அறைக்குள் காற்று நுழைந்தாலும் அக்காற்று அசுதமாகத்தானே இருக்கும்அதுபோல நமது மனதிற்குள் உள்ள பயம்அறியாமைஅவநம்பிக்கை என்கிற தூசிஒட்டடைகளைத் துப்பரவு செய்து மனஜன்னலைவிசாலமாகத்திறந்துவைத்தால் 'முடியும்' என்கிற நேர்மறை எண்ணங்கலெனும் வசந்தம்வீசத் தொடங்கும்.இன்றே நம்மால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப்போடக் கூடாது. வெற்றிக்கு இது ஒரு முக்கியமான சூத்திரம்! நேற்றைய தினம் நல்லதாக இருந்திருந்தால் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். கெட்டதாக இருந்திருந்தால் அனுபவத்தைத் தந்திருக்கும். நமக்கு மகிழ்ச்சிஅனுபவம் இரண்டுமே அவசியம். அப்படி இருக்கும்போது நாளைகோளை பழித்திடாமல் நம்மை முழுமையாக நம்புதல் அவசியம்.ஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எல்லைகளுக்குள் இருக்கிறது நமது உள்ளம். எல்லைகள் இல்லாதது உலகம். நமது வாழ்க்கை சில எல்லைகளுக்குள்தான் வாழப்படுகிறது. வரம்புக்குட்பட்ட வளங்கள்எல்லைக்குள் அடங்கிய திறமைகள்பிறரால் வகுக்கப்படும் எல்லைகள் என இப்படி எத்தனை எல்லைகள்அதனால் எத்தனை தொல்லைகள்..!நமது பௌதீகச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட எல்லைகள்சமூக சூழலால் வகுக்கப்பட்ட வரம்புகள்நமது திறமையில் இருக்கும் கட்டுப்பாடுகள்இதுதவிர நமக்குநாமே வகுத்துக்கொள்ளும் வரம்புகள்இப்படி எல்லாவற்றையும் கடந்துதான் வெற்றி கிடைக்கிறது. ஏமாற்றம்கோபம்வெறுப்பு என்கிற நிலைக்கு நாம் தள்ளப்படுவது இந்த வரம்புக்குள் வாழத்தெரியாததால் தான். வரம்புகளை எட்டி உதைக்கும் வீண் முயற்சியில் வாழ்நாள் முழுவதையும் கழித்து தன்னிரக்கத்தால் அழுவதை நாம் தவிர்ப்பது மிக மிக அவசியம்.சரியான முறையில் செய்யப்படும் முயற்சி, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்பதை நினைவில் கொள்வோம். வாழ்வில் முன்னேறுவோம்!
தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று  ஹாரங்கள் 


மமஹாரம்- உங்களை பற்றிய உங்களது சுய சிந்தனை 

அகங்ஹராம் -உங்களை மற்றவர்கள் எப்படி நினைக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திப்பது 


அன்னியஹாரம்- மற்றவர்கள் உங்களை பற்றி சிந்திப்பது 
அதாவது உங்களை விமர்ச்சிப்பது 

​வாழ்வில் நீங்கள் உயர்வடைய வேண்டும் என்றால் அன்னியஹாரத்தை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும் ​...

Saturday, 9 July 2016

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!
வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.
கடல் அலை எழுவதை பார்க்கிறோம். அலை என்பது நீரின் அசைவு. அலை என்னும் இயக்கத்தை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே மூலம். அலை என்பது தோற்றம். கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலையே அலை. இதைப்போலவே இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால், எஞ்சி இருப்பது இறைநிலை மட்டுமே என எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். அண்டவெளியே இறைவன் என்கிறார்.
மனித உறவுகள் மேம்பட  மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.
3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
10. உண்மை எதுபொய் எது  என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.
11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
13.  அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.
15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.
17. ‘நானே பெரியவன் நானே சிறந்தவன்என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி.

Friday, 8 July 2016

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, ‘பிரேக்’ கிடையாது.
ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா… கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.
ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.
‘அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல…’ என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.
இத்தகைய நபர்களுக்கு, தப்பித் தவறி, ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு துறைத் தலைமையோ, ஒரு நிறுவன உரிமையோ கிடைத்துவிடுமாயின், இவர்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் பாடு ரொம்பச் சிரமம்.
சொன்னதைக் கேளாதவர்களின் தன்மையைப் பார்க்க பார்க்க, மற்றவர்கள் மெல்ல இவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பிப்பர். சொல்லி என்ன பயன் என்பது மட்டுமல்ல; நம் மரியாதையைக் காப்பாற்றி கொண்டால், அதுவே போதுமானது என்பதும், ஒரு காரணம்.
‘நான் இப்படிப்பட்ட ஆள் அல்ல…’ என்று, சிலர் மறுக்கலாம்; ஆனால், நமக்குள் இருக்கும், ‘பிரேக்’ இல்லா கப்பல், அவ்வப்போது நம்மை அறியாமல் பயணப்பட ஆரம்பித்து விடுகிறது.
இதனால், நாம் இப்போது பார்த்தவர்களைப் போல், சில நேரங்களில், சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், நாம், ‘பிரேக்’ இல்லாக் கப்பல்களாகி போகிறோம். யார் என்ன சொன்னாலும், அந்த நேரத்தில் மட்டும் காதில் ஏறுவதில்லை.
இவர்களுக்கு, சில கேள்விகள்… நீங்கள் எடுத்தது சுயமுடிவுதானா, நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிறர் தலையீடு செய்யாத சுயமுடிவு என்றால், உங்கள் முடிவு எத்தனை முறை சரிவர அரங்கேறியிருக்கிறது… உங்கள் முடிவின், வெற்றி சதவீதம் என்ன?
‘சரியோ, தவறோ நான் எடுப்பதே முடிவு; விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை…’ என்று வாதிடுபவரா நீங்கள்? அடடே…. நானும் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்; சிதறும் படகாய் ஆக எனக்கு விருப்பமில்லை.
பெரும்பகுதி சரியாகவே நடக்கும் என்கிறவரா நீங்கள்… சில நேரங்களில் மட்டும் தவறு நடக்கிறது என்கிறீர்களா… அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாம்.
சில பிழைகளுக்கு விலை இல்லைதான்; ஆனால், சில பிழைகளுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறதே!
பிழையற்ற சரியான செயலா; அதெப்படி முடியும்? பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் போது, அதில் அவர்கள் கூறும் சாதக, பாதகங்களை அலசும் போது, ஒரே கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள் தாம் அதிகம் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
‘ஆளாளுக்கு அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தால், அது கட்டுபடியாகிற விஷயமா… எல்லாருமா சேர்ந்து குழப்பி விடுவர்; அதெல்லாம் சரிப்பட்டு வராது…’ என்கிறீர்களா?
பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும் போதுதான், ஒரு பொருளின் முழுப் பரிமாணமும் தெரியவருவது போல், ஒரு முடிவும் பல கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது, பெரும்பாலும் பிழையற்ற முடிவு எடுப்பது சாத்தியமாகிறது. காரணம், அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டு விட்டனவே!
ஒரே கோணத்தில் பார்த்து தன்னிச்சையாகவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, இனி முடிவு கட்டிவிட்டு, ஒவ்வொன்றையும் அலசி எடுத்துப் புரட்டிப் புடம் போட்ட பின், முடிவுகளை எடுத்தால், அதுவே தங்கமான முடிவாக இருக்கும்!

Thursday, 7 July 2016

ஆனந்தம் என்பது எது தெரியுமா?

ஆனந்தம் என்பது எது தெரியுமா

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை
அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.